மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே மண்ணெண்ணை அடுப்பு வெடித்து பள்ளி மாணவி சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சனிக்கிழமை மண்ணெண்ணை அடுப்பு வெடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 2:57 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சனிக்கிழமை மண்ணெண்ணை அடுப்பு வெடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள வேலூரைச் சேர்ந்தவர் ராஜா(40) இவரது மகள் பிரியா(16) இவர் விராலிமலை பெண்கள் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார், இந்நிலையில் சனிக்கிழமை காபி போடுவதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணை அடுப்பை பற்றவைக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சிதறியதில் உடம்பு முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அலறித் துடித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிரியா உயிரிழந்தார், இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.