ரூ.3 ஆயிரம் லஞ்சம்: காவல் பெண் உதவி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்து வழக்கை முடித்துத் தருவதற்கு, செவ்வாய்க்கிழமை ரூ. 3000 லஞ்சம் பெற்ற காவல் பெண் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
Updated on
1 min read

திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்து வழக்கை முடித்துத் தருவதற்கு, செவ்வாய்க்கிழமை ரூ. 3000 லஞ்சம் பெற்ற காவல் பெண் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸôர் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள மேலசீதேவிமங்கலம் பகுதியைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் மகன் திவாகர் (26).  பட்டயப் படிப்பு படித்துள்ளார். இவர்  கடந்த 24-ம் தேதி தனக்குச் சொந்தமான  சரக்கு வாகனத்தை சமயபுரத்துக்கு ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து இரு வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் ஆர். தேவகி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தார்.இதற்கிடையே  விபத்துக்குள்ளான வாகன உரிமையாளர்கள் இருவரும் சமதானமாகி தங்களது வாகனத்தை காவல் நிலையத்திலிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை முடிப்பதற்காக திவாகரிடம், காவல் உதவி ஆய்வாளர் தேவகி ரூ. 3000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத திவாகர் இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸôர், திவாகரிடம் செவ்வாய்க்கிழமை ரசாயனம் தடவிய ரூ. 3000-த்தை கொடுத்தனராம்.

போலீஸாரின் ஆலோசனைப்படி, திவாகர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்று காவல் உதவி ஆய்வாளர் தேவகியிடம் ரூ. 3000 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸôர் தேவகியை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஸ்ரீரங்கம் உத்திரவீதியிலுள்ள தேவகியின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com