கொடும்பாளூரில் இருசக்கர வாகனம் சைக்கிளில் மோதிய விபத்தில் விவசாயி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மதுரை சாலை கொடும்பாளூர் அருகே புதன்கிழமை சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மருத்துவமனையில் விவசாயி


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மதுரை சாலை கொடும்பாளூர் அருகே புதன்கிழமை சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மருத்துவமனையில் விவசாயி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் கோயில்பட்டி அருகே உள்ள சோமன்பட்டியைச் சேர்ந்தவர் கங்கன் மகன் நல்லுச்சாமி(46) விவசாயி, இவர் புதன்கிழமை கொடும்பாளூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக, விராலிமலை மதுரை நான்கு வழிச்சாலை வழியாக கசவனுர் பிரிவு சாலை அருகே வந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த, திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள எலமனம் சீத்தப்பட்டியைச் சேர்ந்த சுப்பு மகன் மோகன்(51) இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நல்லுச்சாமி, மோகன் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லுச்சாமி புதன்கிழமை இறந்தார். மோகன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...