தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2015, 4:50 am

சீனிவாசன்

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் ஜூலை 20-ஆம் தேதி  பல்வேறு நிலைகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டம் 19-ஆவது நாளாக நீடித்து வருகிறது. எனினும், இதுதொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத் துறையினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், இன்று நெய்வேலி கியூபாலம் அருகே நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.