விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான விவரங்களை அழிக்கும் பணியை அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் முனனிலையில் ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கடந்த 2014-ல் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயத்திரங்கள் மற்றும் கட்டுப்பாடு கருவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள விவரங்களை 6 மாதத்திற்கு பின்னரே அழிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்திய 715 வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்கு பதிவுகளை அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் அழிக்கும் பணி தொடங்கியது.
இப்பணியின் போது அதிமுக ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி, திமுக சார்பில் சுப்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, வட்டாட்சியர்(தேர்தல்) ஸ்ரீதர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

