அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8,9,10ம் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் நாடக போட்டி (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
இதில், விருதுநகர் மாவட்ட அளவிலான அறிவியல் நாடக விழா போட்டி கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட இருக்கிறது. இதில், பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை பள்ளிக்கல்வி துறை நடத்தி வருகிறது.
அதில், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையிலும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அறிவியல் சார்ந்த சமூகம் என்னும் தலைப்பில் நாடக போட்டி நடத்தப்படுகிறது. அதில், விஞ்ஞானிகள் வாழ்க்கை பணி, வாழ்க்கை ஒளி மையம், புதிய கண்டுபிடிப்பு, வாழ்க்கையில் அறிவியல், தூய்மையும் உடல் சுகாதாரமும் என்கிற தலைப்புகளில் நாடக போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பிலும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்து அதற்கேற்ப ஒப்பனைகளுடன் நாடக குழுவில் நடித்துக் காட்ட வேண்டும்.
இதில், ஏற்கனவே கல்வி மாவட்ட அளவில் நடந்த நாடக போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுக்கள் மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் குழுவினர் வருகிற 21-ம் தேதி மாநில அளவில் சேலத்தில் நடைபெற இருக்கிற போட்டியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

