விருதுநகர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் தயார் செய்த 3 பேரை ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து 7900 கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி மற்றும் வெள்ளைத்திரிகளை தயார் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை திடீர் ரெய்டு மேற்கொண்டனர். அதில், ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ரவிசந்திரன்(51) என்பவர் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கருந்திரிகள் கட்டுக்களாக தயார் செய்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அப்பணியில் அதே பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன்(51) மற்றும் சதாசிவம்(47) ஆகியோரும் ஈடுப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த 6500 வெள்ளைத்திரி மற்றும் 1400 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்து காட்டுப்பகுதியில் அழிப்பதற்காக வேனில் ஏற்றிச் சென்றனர். எனவே பறிமுதல் செய்த கருந்திரி கட்டுக்களின் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

