விருதுநகர் அருகே குடியிருப்புகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து, கருந்திரிகட்டுக்களையும் செவ்வாய்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே சூலக்கரைமேடு பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் கருந்திரிகளை தயார் செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சூலக்கரைமேடு பகுதியில் குடியிருப்புகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடியிருப்புகளில் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வசந்தா(55),நாகப்பன்(72), சபாபதி(53), சத்யா(32) ஆகியோர் மீது சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதோடு, அவர்களது வீடுகளில் இருந்து தலா ரூ.200 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழிப்பதற்காக கொண்டு சென்றனர்.
கருந்திரி கடத்திய முதியவர் கைது: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் சாலை வச்சக்காரப்பட்டி போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சங்கரலிங்காபுரத்திலிருந்து ஆர்.ஆர்.நகர் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த வாகனத்தில் சாக்கு பையில் 130 கருந்திரி கட்டுக்கள் இருந்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த செல்லையா(62) என்பதும், கருந்திரிகளை வாடியூரில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

