ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் ஈகை திருவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கிருபை கிரியை உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் ஈகை திருவிழா


ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கிருபை கிரியை உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் ஈகை திருவிழா புதன்கிழமை, தலைவர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.
வசந்தி ஆரம்ப ஜெபம் செய்தார். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டல அனைத்து விடுதிகளின் இயக்குநர் இ.சாலமன், எம்.டாலரன்ஸ் சாமுவேல், ஜாஸ்மின் ஜெசிந்தா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.
சி.எஸ்.ஐ. தோமா தேவாலயத்தின் சபைகுரு ஜே.சாம் கமலேசன் சிறப்பு கிறிஸ்துமஸ் தேவ செய்தியளித்தார்.நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற 260 பேருக்கு நிறுவனம் சார்பில் புத்தாடைகளை வழங்கி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.மணிப்பிள்ளை சிறப்புரையாற்றினார்.
தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...