மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 4:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

இதன் வழியே ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனர்.

பின்னர் பரமபதவாசல் திறப்பு நடைபெற்று ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தல் நடைபெற்றது. மாடவீதி, கந்தாடைவீதிகள் வழியே சுவாமிகள் எழுந்தருளி ராப்பத்து மண்டபம் சேருதல் நடைபெற்றது.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழித் தொடக்கம் நடைபெற்று அரையர் அருளிப்பாடு நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தில் உயர்வற உயர்நலம் என்ற அரையர் வியாக்யானம் நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி முத்துராஜ், மாவட்ட அதிமுக பொருளாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.