மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 1:23 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் த.சமுத்திரக்கனி (28). இவரது மனைவி ரெஜினா மேரி (28). சமுத்திரக்கனி வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்துக் கொண்டு, மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்ட சமுத்திரக்கனி மனைவியை கம்பால் அடித்துள்ளார். காயமுற்ற அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தட்டிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரெஜினா மேரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சமுத்திரக்கனியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.