மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசுப் பணியாளர் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரம்

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2015, 1:38 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.காமராஜ், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சங்கங்கள் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக நாட்காட்டி அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும். நடப்பு ஆண்டு தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும் மழை, வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதற்கு பயன்படுத்தும் நிதியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன் பேரில் ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலையை சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.