எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு - பொதுமக்கள் வேதனை

காரைக்காலில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது, பொதுமக்களை வேதனைப்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 10:32 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது, பொதுமக்களை வேதனைப்படுத்தியுள்ளது.

காரைக்கால் கலால்துறை மூலம் வெளிட்ட சுற்றறிக்கை விவரம் :  புதுவையில் 89 மொத்த விற்பனை மதுக்கடைகளும், 362 சில்லறை வியாபார மதுக்கடைகளும் உள்ளன. சில்லறை விற்பனை கடைகளில் 47 அரசு நிறுவனமாகும். மொத்த விற்பனை கடைகளில் 3 அரசு நிறுவனத்தை சேர்ந்ததாகும்.

மொத்த விற்பனையகங்கள் காலை 9 மணிக்கு திறந்து இரவு 10 மணி வரை செயல்படலாம். சில்லறை விற்பனையகங்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை விற்பனை செய்யலாம். ஹோட்டல்களில் உள்ள மதுக்கடைகள் காலை 8 மணிக்குத் திறந்து இரவு 12 மணி வரை செயல்படலாம். இது பிப்.17 முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மதுக்கடைகள் காலை 9 மணிக்குத் திறந்து இரவு 10 மணிக்குள் மூடப்பட்டுவருகிறது. கலால் துறையினரின் முறையான கண்காணிப்பு இல்லாததால், கடைகள் பல இரவு 11 மணியை கடந்தும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக பொதுக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுவருகிறது.

கூலி வேலைக்கு வெளியே சென்றவர்களில் மது அருந்தும் பழக்கமுள்ளோரில் பலர் மாலை நேரத்தில் வீடு வந்து சேர்வதில்லை. மதுக்கடைகள் முன்பும், சாலையோரத்திலும் மது போதையில் விழுந்து கிடக்கின்றனர். இரவு அவர்களை தேடி அலைந்து, வீட்டுக்கு அழைத்துவரவேண்டியுள்ளதாக வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,  கலால் துறையின் இந்த கால நீட்டிப்பு அறிவிப்பு தங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக மகளிரிடையே கருத்து தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.