/

அடைமழையிலும் அணிவகுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அடைமழையிலும் அணிவகுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :1 ஜனவரி 2015, 4:53 am

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அடைமழையிலும் அணிவகுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருக்கோவிலூரை அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅரங்கநாதப் பெருமாள் ஸ்வாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி 31-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்றது.

 இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.55 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 இதையடுத்து திருவரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

 ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி ஓரே நாளில் வந்ததால், கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் வருகை தந்தனர்.

 இந்நிலையில் ஏழத்தாழ 1 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் அணிவகுப்பு தொடர்ந்து காணப்பட்டது. இப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு லேசான அளவுக்கு மழை பெய்தது.

 இருந்தும் பக்தர்கள் அணிவகுப்பில் இருந்து பின்வாங்காமல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதையே நோக்கமாக கொண்டனர். பாதுகாப்புப் பணியில் போலீஸார் அதிகளவில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.