புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2015, 7:48 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

இன்று அதிகாலை கோயிலில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை முட்ட பரமபத வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சொர்க்க வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பார்த்தசாரதி உற்சவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் நெய்தல் நிலத்தில் அமைந்த சிறப்பு வாய்ந்தது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் ருக்மணி தாயாருடனும், மகன் சாத்யகி உள்ளிட்ட குடும்ப சமேதராக இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்தங்களை வேதியர்கள் முழங்க சொர்க்கவாசலில் எம்பெருமான் எழுந்தருளி, தமிழ் மறையான திருவாய்மொழி கண்ட நம்மாழ்வாருக்கு அருள்காட்சி தந்தார்.

இதைத் தொடர்ந்து, இறைவனே, தமிழுக்கு சிறப்பு செய்யும் வகையில், நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.  இதை பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என்று திருநாம கோஷங்களை முழங்கியவாறு, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.