நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநர்: திமுக வலியுறுத்தல்

மத்திய அரசு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்றும் உரிமையை முதல்வர்களுக்கும், குடியரசு தினத்தில் கொடியேற்றும் உரிமையை மாநில ஆளுநர்களுக்கும் வழங்கி உள்ளது. அதன்படியே குடியரசு தின

News image
Updated On :3 ஜனவரி 2015, 9:11 am

சுஜித்குமார்

புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில அமைப்பாளர் டாக்டர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியேற்றும் உரிமையை முதல்வர்களுக்கும், குடியரசு தினத்தில் கொடியேற்றும் உரிமையை மாநில ஆளுநர்களுக்கும் வழங்கி உள்ளது. அதன்படியே குடியரசு தின விழாக்களில் அவர்கள் கொடியேற்றி வருகின்றனர். ஆனால் வரும் குடியரசு தினத்தில் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் மத்திய அரசு இதுவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு என்று நிரந்தர ஆளுநரை நியமிக்கவில்லை. அந்தமான் பிரதேசத்திற்கான ஆளுநர் ஏ.கே.சிங், புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக பார்த்து வருகின்றார். இதனால் அவரால் மாதத்தில் சில தினங்கள் மட்டுமே புதுச்சேரியில் இருக்க முடிகின்றது.

மேலும் வரும் குடியரசு தினத்தில் அந்தமானில் தேசியக்கொடியேற்றவும் ஆளுநர் சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. இதனால் புதுவையில் தேசியக்கொடி ஏற்றும் பொறுப்பை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. அரசின் நெறிமுறைப்படி மாநிலத்தில் ஆளுநரே முதல் குடிமகனாவார்.

அவ்வாறு இருக்க தலைமைச் செயலர் தேசியக் கொடியேற்றும்போது முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சித்தலைவர்கள் விழாவில் அமர்ந்திருக்க முடியுமா அது சரியாகத்தான் இருக்குமா அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் குடியரசு தின விழாவை தி.மு.கழகம் புறக்கணிக்கும். அதுபோலவே பிற கட்சிகளும் முடிவு எடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

குடியரசு தின விழா மற்றும் இரு பகுதிகளின் நிர்வாகத்தை பார்க்கும் ஆளுநர் சிங் அலைச்சலுக்கு உள்ளாகி புதுச்சேரி நிர்வாகத்தை சரியாக பார்க்க முடியாமல் இருப்பதை கருத்தில் கொண்டும் உடனடியாக புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.