தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறை அருகே பக்தர்கள் வேன் மோதி சாலையோரம் நின்ற 2 பேர் சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை காலை பக்தர்கள் வேன் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்த

News image
Updated On :6 ஜனவரி 2015, 9:02 am

கிருஷ்ணமூர்த்தி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை காலை பக்தர்கள் வேன் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டு விட்டு அங்கிருந்து திங்கள்கிழமை மாலை ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற வேன் செவ்வாய்கிழமை காலை திருச்சி  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள சி.கல்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு சைக்கிள்கள் மீது வேன் மோதியது. தொடர்ந்து அறிவிப்பு பலகையும் இடித்து தள்ளிய வேன் அங்கிருந்த மற்றொரு சைக்கிள், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ மீது மோதியதுடன் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.

பின்னர் வேனின் முன்பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டதால் சாலையின் வலதுபுறத்தில் உள்ள தடுப்புச்சுவற்றில் மோதி வேன் நின்று கொண்டது.இதில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்த போது 3 பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது வத்தமணியாரம்பட்டியில் உள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த சித்திரம்பிள்ளை வயது 29 என்ற விவசாயி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் படுகாயமடைந்த நிலையில் கிடந்த நடுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் வயது 35, ராமரெட்டியபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் வயது 30 ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை  அளித்த சிறிது நேரத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குபின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேல் முருகன் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸôர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சித்திரம்பிள்ளையின் சடலத்தை கைபற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் திருவண்ணாமலையைச் சேர்ந்த முரளிதரன் வயது 26 என்பரை போலீஸார் கைது செய்தனர். மேலும் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் திருச்சி  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இரண்டு விபத்துக்களில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.