தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மக்களை தொகுதிக்குள்பட்ட நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மக்களவை தேர்தல் வெற்றிப்பெற்றதற்கு நன்றி தெரிவித்து சனிக்கிழமை அவர் பேசியது: தருமபுரி

News image
Updated On :11 ஜனவரி 2015, 11:33 am

ராதாகிருஷ்ணன்

மதுக்கடைகள் மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்தார்.

தருமபுரி மக்களை தொகுதிக்குள்பட்ட நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மக்களவை தேர்தல் வெற்றிப்பெற்றதற்கு நன்றி தெரிவித்து சனிக்கிழமை அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பது ஆனது ஆவல்.சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவிற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் வெற்றிப்பெற்றால் மக்களுக்கு தேவையான நல திட்டங்களான சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தருவோம்.

தருமபுரி மாவட்டம், கல்வி வளர்ச்சியில் கடைசி மாவட்டமாக உள்ளது. ஆனால், மது விற்பனையில் முதல் மாவட்டமாக விளங்குகிறது.இது குறித்து, ஆட்சியாளர்கள் கவலைபடுவதில்லை. நீங்கள் மது அருந்த வேண்டும் அதன் மூலம் உங்கள் பணம் மட்டும் அவர்களுக்கு தேவை.

கடந்த ஆண்டு மட்டும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு ஆயிரம் கோடிக்கு மது அருந்தியுள்ளனர். இந்த பணத்தை அரசுக்கு கொடுத்துள்ளனர். இந்த மது பழக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாவத பெண்கள் மட்டுமே. பள்ளி மாணவர்கள் மது அருந்துகின்றனர். வருங்கால தலைமுறை குறித்து இந்த அரசுக்கு கவலையில்லை.

எனவே பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம். மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி எனது தலைமையில் ஒரு சில வாரங்களில் போராட்டம் நடத்தபடும். இதில் பெண்கள் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.