தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஜெயலலிதாவை போல் நான் ஒன்றும் கோபக்காரன் அல்ல: விஜயகாந்த்

ரிசிவந்தியம் தொகுதிக்குப்பட்ட பகண்டை கூட்டு சாலை அருகில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். பின்னர்

News image
Updated On :12 ஜனவரி 2015, 11:56 am

ச.​ கார்த்​தி​கே​யன்

ரிசிவந்தியம் தொகுதிக்குப்பட்ட பகண்டை கூட்டு சாலை அருகில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது, 

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகமும் தமிழக அரசும் ரகசிய உறவு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மின்சார உற்பத்தி குறித்து திமுக சரியாக திட்டமிடவில்லை என்று அதிமுக கூறுகிறார்கள் ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து 3 1/2 ஆண்டுகள் ஆகிறது, மின்சார உற்பத்திக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?. இவர்களும் ஒன்றும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் மாறி மாறி குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை மீறி நடக்காது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இதனை அரசியலாக்கிகொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் வருமான வரி வழக்கில் எலும்பூர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் அபாரத தொகை கட்டிவிடுகிறேன் என்றும். அதனால் வழக்கை வாபாஸ் பெறுங்கள் என்றும் ஜெயலலிதா கூறுகிறார். ஒரு வழக்கில் அபராத தொகையை நான் கட்டுகிறேன் என்று சொல்லுபவர்கள் குற்றவாளிகள் தானே?. அதிமுக அரசு விலைவாசியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் லஞ்சம் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்  தாலிக்கு தங்கம் வழங்கும்  நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் அந்த விழாவிற்கு ஆளும் கட்சி பணத்தை கொடுத்து  கூட்டத்தை கூட்டுகிறது. ஆனால் அதை விட எங்கள் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் ஆறாக காட்சியளிக்கிறது. இது மற்றவர்களை போல் பணம் கொடுத்து கூடிய கூட்டம் அல்ல.தானாக கூடிய கூட்டம் .மீனவர் பிரச்னை காவிரி பிரச்னை குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வேலையாக கொண்டுள்ளார். தவிர நேரில் போய் பார்த்ததுண்டா? கிடையாது. ஜல்லிகட்டு தொடர்ந்து நடத்த வேண்டும்.ஜெயலலிதாவை போல் நான் ஒன்றும் கோபக்காரன் அல்ல. ஊடகங்களும்,சில பத்திரிக்கைகளும் மற்றும் சில அரசியல் கட்சிகளும், மக்கள்  மத்தியில் நான் குடிப்பதாக சித்தரிக்கிறார்கள். ஆனால் மக்கள் மன்றத்தில் எனது கல்லீரலை பரிசோதிக்க நான் ரெடி நீங்கள் ரெடியா?.

தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனை முதலமைச்சர். ஒரு பக்கம் மக்களின் முதல்வர் என்றும், மறுபக்கம் பன்னீர்செல்வத்தை தமழிக முதல்வர் என்றும் கூறிக்கொள்கிறார்கள். இப்படி ஏன் மக்களை ஏமாற்றவேண்டும்.

நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.