டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஜன.24-இல் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.அதிமுக சார்பில் சீ.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

அரவிந்தன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஜனவரி 24-ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.அதிமுக சார்பில் சீ.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வர உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை திமுக முக்கியமானதாகக் கருதுகிறது.இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் அல்லது வாக்கு வித்தியாசம் அதிகம் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்த நிலையில்,  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் திமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை ஜனவரி 24-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.அதன்பின், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தேர்தல் பிரசார யுக்தி, தேர்தலில் திமுகவினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.