ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

பொன்மலை அருகே சங்கிலியாண்புரம்,சபாபதி தெருவில் செவ்வாய்க்கிழமை 2 பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திóருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

Updated On :20 ஜனவரி 2015, 3:00 pm

திருச்சி பொன்மலை அருகே சங்கிலியாண்டபுரத்தில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பொன்மலை அருகே சங்கிலியாண்புரம்,சபாபதி தெருவில் செவ்வாய்க்கிழமை 2 பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திóருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ,ஆய்வாளர் பாலுச்சாமி, பொன்மலை உதவி ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மேற்கண்ட தெருவை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், தேவதானம் காவேரி சாலையைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் தேவராஜன்(19), ந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் தயாளன்(31) ஆகியோர் என்பதும், இதில் தயாளன் மனித விடியல் என்ற வார இதழில் செய்தியாளராக பணியாற்றி வருவதும் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 460 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.