சமயபுரம் கோயில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைப்பூசத்திருவிழா ஜனவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 3-ம்தேதி வரை


திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைப்பூசத்திருவிழா ஜனவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 3-ம்தேதி வரை நடைபெறுகிறது.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இக் கோயிலில்தைபூசத்திருவிழாவையொட்டி 25-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.இந்த கொடியேற்ற விழாவில் அம்மன் மூலஸ்தானத்திலிருந்து அலங்காரத்துடன் புறப்பாடாகி அம்மன் கொடி படத்துடன் கோயிலைச் சுற்றி வலம் வந்து, கொடி மரத்தில் பூஜைகள்ல நடத்தி கொடி மரத்தில் காப்பு கட்டி கொடி ஏற்றம் நடைபெற்றது. பூஜைகள் மற்றும் கொடியேற்றத்தினை குருக்கள்கள் பிச்சை, கணேசன், சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடத்தினர். விழாவில் கோயிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான க.தென்னரசு, உள்துறை கண்காணிப்பாளர் ராமசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி, புலவர் ஜெகநாதன், மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாரதணையும், இரவு 8 மணிக்கு அம்பாள் மரகேடயத்தில் எழுந்தருளி வீதி உலாவும், இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சேருதல் நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து 26-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு அம்பாள் பல்லாக்கில் எழுந்தருளி வீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மஹா தீபாராதணையும் நடைபெறுகிறது.
ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை தினசரி இரவு 8 மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிதிருவீதி உலாவும், இரவு 9 மணிக்கு மூலஸ்தான் சேருதல் நடைபெறுகிறது.2-ம் தேதி காலை 10 மணிக்கு அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும்,மாலை 5 மணிக்கு அபிஷேகம், இரவு7 மணிக்கு மஹாதீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்பாள் தெப்பத்தில் காட்சியளித்தலும், இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து ஆஸ்தான மண்டபம் சேருதல் நடைபெறுகிறது.
3-ம் தேதி காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் திருக்கோயிலிருந்து அம்பாள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில்எழுந்தருளி வழி நடை கண்டருளி நொச்சியம் வழியாக வடதிருக் காவேரிக்கு சென்றடைதலும், மாலை 6 மணிக்கு தீர்த்தவாரிகண்டருளுதலும், இரவு 7 மணிமுதல் 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனமும், இரவு 10 மணி முதல் 11 மணி வரைஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்ச்சியும், அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரைமகா அபிஷேகமும் அதிகாலை 3 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தலும்நடைபெறுகிறது.
3-ம் தேதி காலை 6 மணிக்கு வட திருக் காவிரியிலிருந்து அம்பாள் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி நொச்சியம்,மண்ணச்சநல்லூர் வழிநடை கண்டருளி இரவுவ 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சேருதலும், இரவு 11 மணிக்குஅம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று, கொடிமரத்திற்கு அம்பாள் புறப்பாடாகி கொடி படம் இறக்கி, இரவு 12 மணிக்குகேடயத்தில் அம்பாள் திருவீதி உலா வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாமம் நடைபெற்று திருக்கோயில்நடைசாத்துதல் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான க.தென்னரசு மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...