டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கார் மீது லாரி மோதல்- கல்லூரி பேராசிரியர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் முன்னால் சென்ற காரின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் கல்லூரி

News image
Updated On :25 ஜனவரி 2015, 7:10 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் முன்னால் சென்ற காரின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் கல்லூரி பேராசிரியர் சிந்திராஜன்(68) படுகாயமடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள சாம்ஸ் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணிபுரிபவர் சிந்திராஜன். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவரான இவர் தினமும் அவருக்கு சொந்தமான காரில் கல்லூரிக்கு வந்து பணி முடித்து காரிலேயே வீட்டிற்கு செல்வார்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும் சிந்திராஜன் வழக்கம் போல வீட்டிற்கு அவரது காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சிந்திராஜன் காரில் வந்துக் கொண்டிருந்த போது பெரியபாளையத்தில் இருந்து ஜனப்பன்சத்திரம் பகுதி நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி சிந்திராஜனின் காரின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் கார் தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் கல்லூரி பேராசிரியர் சிந்திராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்ததும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் லாரியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

சம்பவம் குறித்து அறிóந்து பெரியபாளையம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து  சிந்திராஜனை மீட்டனர். தொடர்ந்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு கழுத்து எலும்பும், இரு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.