மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், காவல் சார்பு ஆய்வாளர் தங்கையை ஏமாற்றி கற்பழித்து, தற்கொலைக்குத் தூண்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர்

News image
Updated On :2 ஜூலை 2015, 1:21 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், காவல் சார்பு ஆய்வாளர் தங்கையை ஏமாற்றி கற்பழித்து, தற்கொலைக்குத் தூண்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக 2011-ம் ஆண்டு பணிபுரிந்தவர் காளிராஜ். இவரது சொந்த ஊர் சிவகாசி தாலுகா, ஏ.துலக்கபட்டி. இவர் பணியில் இருந்தபோது இவரது தங்கை பானுமதி (எ) பால்மதி (24) யைக் காணவில்லை. இவர் தனது பெற்றோருடன் ஏ.துலுக்கபட்டியில் குடியிருந்து வந்தார்.

இதே இடத்தைச் சேர்ந்த அகிம்சா-இந்திரா என்பவர்களின் மகன் ராஜேஸ் (29) என்பவர் பானுமதி (எ) பால்மதியைக் காதலித்து வந்துள்ளார். பானுமதியை மானபங்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பானுமதியை இறங்க வைத்து 7.9.11-ம் தேதி கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள குறிஞ்சியாண்டவர் கோவிலில் வைத்து தாலி கட்டி விட்டு, ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். பின்னர் ராஜேஸ் உனக்கு தாலி கட்டவில்லை என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டுள்ளார். இதில் பயந்துபோன பானுமதியை, ராஜேஸ் வைத்து வாழாமல் கங்காகுளத்தில் உள்ள ரேவதி என்பவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு சென்றுவிட்டாராம்.

இந்த விவரத்தை தனது அண்ணனான சார்பு ஆய்வாளர் காளிராஜூடம் 9.9.2011-ம் தேதி பானுமதி கூறியுள்ளார். அப்போது அவர், பானுமதியை அங்கேயே இருக்கும்படியும், பெற்றோரை அனுப்புவதாயும் கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் பானுமதியை ராஜேஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று நியாயம் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்களை ராஜேஸ் குடும்பத்தார் மிகத் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்களாம். பின்னர் 10.9.11-ம் தேதி பானுமதியை ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள காளிராஜின் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்கள்.ராஜேஸ் குடும்பத்தார் அவமானப்படுத்தியதை நினைத்து மன விரக்தியில் இருந்த பானுமதி (எ) பால்மதி, 12.9.11-ம் தேதி, படுக்கை அறையில் நூல் கயிற்றைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சார்பு ஆய்வாளரா காளிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ராஜேஸ், அவரது சகோதரர் முனீஸ்வரன், தந்தை அகிம்சா, தாய் இந்திரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி என்.ராஜலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்குரைஞராக எம்.ஜெகதீஸ் ஆஜராகி வாதாடினார்.வியாழக்கிழமை நீதிபதி என்.ராஜலட்சுமி தீர்ப்பு கூறினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராஜேஸ் மீதான இ.த.ச. பிரிவு 417 (ஏமாற்றுதல்), 376 (கற்பழிப்பு), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளிலான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்திற்குகிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என முடிவு செய்யப்படுகிறது.

பானுமதி (எ) பால்மதியை ஏமாற்றிய குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி என்.ராஜலட்சுமி உத்தரவிட்டார். ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என முடிவு செய்து அவர்களை விடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.