மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொழில் நுட்ப பயிற்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக இடைவெளி உள்ளது

தற்போதைய தொழில் நுட்ப பயிற்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக இடைவெளி உள்ளதால்தான் மாணவர்கள் வேலையில் சேர்ந்த குறுகிய காலத்தில் வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்கிறார்கள் என்று பெங்களூரு டெசால் செமி கண்டக்டர் நிறுவன மேலாளர் எம்.ஆனந்த் கூறினார்.

News image
Updated On :5 ஜூலை 2015, 5:41 am

கோ.ஜெயக்குமார்

தற்போதைய தொழில் நுட்ப பயிற்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக இடைவெளி உள்ளதால்தான் மாணவர்கள் வேலையில் சேர்ந்த குறுகிய காலத்தில் வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்கிறார்கள் என்று பெங்களூரு டெசால் செமி கண்டக்டர் நிறுவன மேலாளர் எம்.ஆனந்த் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. அசோஸியேசன் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் குழுவை ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய தொழில் நுட்ப பயிற்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக இடைவெளி உள்ளதால்தான் மாணவர்கள் வேலையில் சேர்ந்த குறுகிய காலத்தில் வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்கிறார்கள். நேர்காணலுக்கு செல்வதற்கு முன் பணிக்குச் சேரப்போகும் நிறுவனம் குறித்த முழு தொழில் நுட்பத்தையும் தெரிந்து கொண்டு குறிப்பு எடுத்துச் சென்றால் நேர்காணலில் வெற்றியடையலாம்.

ஊதியத்திற்காக தொழிற்சாலையை தேர்ந்தெடுக்காது, தொழிற்சாலையினுடைய வேலைத் துறையில் மிகுந்த விருப்பம் கொண்டு தொழிற்சாலையை தேர்வு செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் ஒரு கம்பெனியில் 3 வருடம் வேலை பார்த்தால்தான் தொழில்நுட்ப அனுபவம் கிடைக்கும் என்றார் அவர். நிகழ்ச்சிக்கு துணை வேந்தர் டாக்டர் ச.சரவணசங்கர் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகர், செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார். பேராசிரியர் ஜெனிஸப் ஜாக்சன் வரவேற்றார். ருமேனியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கிம் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாண்டு மாணவி மீனாட்சி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.