மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரு சக்கர வாகனத்திலிருந்த தவறி விழுந்த பெண் சாவு

கணவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :6 ஜூலை 2015, 1:23 pm

கோ.ஜெயக்குமார்

கணவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரத்தைச் சேர்ந்தவர் ப.முருகன். இவரது மனைவி முப்பிடாதி (29). முருகன் இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் மனைவி அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி அருகே 2.6.15-ம் தேதி சென்று கொண்டிருந்தபோது, முப்பிடாதி தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து ராஜபாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் காயம் அடைந்த தலை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 9.6.15-ம் தேதி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் முப்பிடாதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கணவர் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.