திருச்சுழி அருகே மது வாங்கி வரச் சொன்னவருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்சுழி அருகே ஏரசின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசையா(40).  சிலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் துப்புரவு பணியாளராக இருக்கும் ராமர்(40) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், புதன்கிழமை காலையில் மது குடிப்பதற்கு ராமர் பணம் கேட்டாராம். அதற்கு, ராசையா தனக்கும் மது வாங்கி வரும் படி கூறி ரூ.1000 கொடுத்து அனுப்பி வைத்தாராம். நீண்டநேரமாகியும் அவர்  வராத காரணத்தால் மதுக்கடைக்கே நேரடியாக சென்றாராம. அப்போது, ராமர் அதிகமாக மது குடித்த நிலையில் நின்றிருந்தவரிடம், எனக்கு ஏன் மது வாங்கி வரவில்லையென கேட்டும், மீதம் பணமும் கேட்டாராம. அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லையென மறுத்ததோடு அவர் வைத்திருந்த அரிவாளால் ராசையாவை வெட்டியதில் காயம் அடைந்தாராம்.

இது தொடர்பாக அவர் எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துப்புரவு பணியாளர் ராமரை போலீஸார் கைது செய்து அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com