சோரியாஸிஸ் எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் ஒரு புது வகை மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது பல்வேறு கட்டங்களாக, சோரியாஸிஸ் நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட பரிசோதனைகளில் இந்த மருந்து குறிப்பிடத்தக்க அளவில் சோரியாஸிஸ் நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்துகிறது என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு ஏற்படும் தோல் நோய்களில் முதன்மையாகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம், ரத்தம் அழுத்தம், இதயப் பாதிப்புகள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பது சோரியாஸிஸ். சோரியாஸிஸ் நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு தோலில் செதில் செதிலாக உதிருவதும், அரிப்பு, புண்கள் ஏற்படுவதும் மிகவும் சகஜம். இதன் காரணமாகவே, இந்த நோயாளிகள் அதிக அளவில் வெளியிடங்களுக்குச் செல்வதையே தவிர்க்கும் நிலை இருக்கிறது.
சோரியாஸிஸ் நோயாளிகளைப் பொறுத்தவரை, அந்த நோயோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ உலகில் சொல்லப்பட்டு வருகிறது. இதுவரை சோரியாஸிஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளும், தினசரி செயல்பாடுகளில் சில மாற்றங்களுமே பரிந்துரைக்கப்படுகின்றன.
குசெல்குமேப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்து, சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் தோல் நோயியல் துறைப் பேராசிரியர் கென்னத் கோர்டான் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய மருந்து குறித்த ஆய்வறிக்கை மருந்துக்கான நியூ இங்கிலாந்து சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 293 பேருக்கு இந்தப் புதிய மருந்து பரிசோதிக்கப்பட்டதில், பெரும்பாலானவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்ததாகவும், அடுத்தகட்டப் பரிசோதனையில் அந்த மருந்தின் பாதுகாப்பு உள்ளிட்ட வேறு சில விஷயங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


