மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகர் அருகே ஸ்டவ் அடுப்பு வெடித்து மனைவி படுகாயம்

விருதுநகர் அருகே சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்து தீ பரவியதில் மனைவி பாடுகாயம் அடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் காயம் அடைந்தார்.

Updated On :12 ஜூலை 2015, 3:08 pm

விருதுநகர் அருகே சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்து தீ பரவியதில் மனைவி பாடுகாயம் அடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் காயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுநாயகம்(52). இவரது மனைவி பொன்னுத்தாய்(51). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்ததில் பொன்னுத்தாய் சேலையில் தீ மளமள பரவியுள்ளது. உடனே வேலுநாயகம்  மனைவியை காப்பாற்றச் சென்றார். இதில், இருவருமே படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.