தம்பதி கொலைச்சம்பவம்: 10 ஆண்டுகளுக்கு பின் சிபிசிஐடி போலீஸார் 2 பேரை கைது செய்தனர்

விருதுநகரில் வீட்டில் தூங்கிய தம்பதியினர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் 10 ஆண்டுகளுக்கு பின் 2 பேரை கைது செய்து
Updated on
1 min read

விருதுநகரில் வீட்டில் தூங்கிய தம்பதியினர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் 10 ஆண்டுகளுக்கு பின் 2 பேரை கைது செய்து செவ்வாய்கிழமை மாலையில் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர்.

விருதுநகரைச் சேர்ந்த ஒய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி எபினேசர் பால். அவரது மனைவி ஷீலா. இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 2005 ஏப்.6ம் அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதோடு, அவர்கள் அணிந்திருந்த 30 சவரன் நகைகளும் பறிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர். அதில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் கடந்த 2006-ல் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் கொலையாளிகள் யார் என கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு எபினேசர் பாலின் மகள் மேரி ஒலிவியா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவுக்கு சிபிசிஐடி எஸ்பி நேரில் ஆஜராகி பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து உயர்நீதிமன்ற கிளையில் தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு ஆஜரானார். அப்போது, 3 மாதத்தில் கண்டுபிடிக்குமாறு உயநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் விருதுநகர் தயாளன் ராஜேஸ் காலனியில் உள்ள எபினேசரின் வீட்டிற்கு சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு, துணைக்காவல் கண்காணிப்பாளர் மன்மதபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் நேரில்  பார்வையிட்டு உறவினர்களிடம் முதலில் இருந்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, கொலையாளிகள் யார் என்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

அதற்கு முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக பாண்டியன் நகரில் தங்கமணி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பாலகிருஷ்ணன்(33) என்பவர் கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் முத்துவிடம் சரண் அடைந்தார். அவர் சி.சி.சி.ஐ.டி போலீஸாருக்கு கொடுத்தார். அதன் பின் அவரிடம் விசாரித்ததில் வில்லிபத்திரியைச் சேர்ந்த சென்ட்ரிங் கான்ட்ராக்டர் பாலமுருன்(42) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் பாலகிருஷ்ணன், எபினேசர் பாலுக்கு உதவியாளராக இருந்ததாகவும், பாலமுருகன் வீட்டு வேலை செய்யும் போது பழக்கம் ஏற்பட்டதாகவும், நகைக்கு ஆசைப்பட்டு இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என்பதும்   தெரியவந்தது.

உடனே போலீஸார் 2 பேரையும் கைது விருதுநகர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜார்படுத்தினர். இம்மா்தம் 28-ம் தேதி வரையில் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே தென்மண்டல சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு ஆஜாராகி வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினார். அதன் அடிப்படையில் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com