மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் நாடார் மஹாஜன சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் 113-வது பிறந்த நா்ள் விழா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யாநாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவை நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் அளித்தனர்.
மேலும், இக்கோரிக்கை குறித்து பிரதமரிடம் நேரில் எடுத்துரைப்பதாக சங்க நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாடார் வரலாறு குறித்த குறுந்தகடையும் சங்கத்தினர் வெளியிட அதையும் மத்திய அமைச்சரும், பொரூளாதார நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளருமான எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

