விருதுநகரில் ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

விருதுநகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து புதன்கிழமை நள்ளிரவில் நகை பணத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து புதன்கிழமை நள்ளிரவில் நகை பணத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் லட்சுமி காலனியில் உள்ள பெத்தனாட்சி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(50). இவர் பட்டயக்கணக்கராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாரியப்பன் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதேபோல், வெளியூருக்குச் சென்றிருந்த விருதுநகர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த நாகராஜன். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டை உடைத்து உள்ளேயிருந்த வெள்ளி பொருள்கள் மற்றும் பட்டுச்சேலைகளையும் திருடிச் சென்றனர். அவரது தம்பி ஜெயசந்திரன் வீட்டிற்குள் நுழைந்து பார்த்ததில் எதுவும் இல்லையென்பதால் பொருள்களை உடைத்தும் சென்றிருந்தனர்.

மேலும், பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சங்கர்(40). இவர் கச்சேரி சாலையில் முடிதிருத்தகம் நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்து மேஜையில் வைத்திருந்த பணப்பையில் ரூ.750ஐ திருடிச் சென்றிருந்தனர். எனவே வெளியூர் சென்ற நேரத்தில் பூட்டியிருந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, வெள்ளிப்பொருள்கள், ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், ஒரேநாளில் 4 இடங்களில் அடுத்தடுத்த பகுதிகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com