சீர்காழியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் தி.க.வினர் கைது
சீர்காழியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் திராவிட கழகத்தினர் 29பேர் தடுத்து புதன்கிழமை கைது செய்யபட்டனர்.


சீர்காழியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் திராவிட கழகத்தினர் 29பேர் தடுத்து புதன்கிழமை கைது செய்யபட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார்,அம்பேத்கார் மாணவர் வாசகர் மன்றத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.இந்த தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தியும்,மத்திய அரசை கண்டித்தும் பெரியார் திராவிட கழகம் சார்பில் அதன் நாகை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சிவதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ப.வ.பெரியார்செல்வம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேரணியாக புறப்பட்டு சீர்காழி ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக வந்திருந்த சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த பெரியார் தி.கவினர் முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீர்காழி டி.எஸ்.பி வெங்கடேசன் ரயில்நிலையத்திற்கு செல்லாதவாறு தடுத்து நிறுத்தி 29பேரை கைது செய்து,மண்டபத்தில் அடைத்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...