திருச்சி சமயபுரம் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து: 2 பேர் சாவு
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூரில் ஆம்னி பேருந்தும், சரக்கு லாரியும் திங்கள்கிழமை அதிகாலை மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.


திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூரில் ஆம்னி பேருந்தும், சரக்கு லாரியும் திங்கள்கிழமை அதிகாலை மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்திலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட்க்கு சாத்துக்குடி பழம் ஏற்றி வந்த சரக்கு லாரியும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தும், அதே போல வேனும் திருச்சி நோக்கி இன்று அதிகாலை வந்தது.
திருச்சி சமயபுரம் இருங்களூர் அருகே வந்த போது முன்னால் சென்ற வேன் சாலையின் தடுப்பு சுவரிóல் மோதி விபத்துக்குள்ளானது. பின்னால் வந்த ஆம்னி பேருந்து வேனில் மோதிடாமம் இருக்க பேருந்து ஒட்டுநர் வலது புறமாக பேருந்தினை திருப்பிய போது பின்னால் வந்த சரக்கு லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்தும் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலையினை கடந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புர கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின.
இதில் வேனில் இருந்த திருச்சி அண்ணாநகரைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாள் மகன் அஜய் (17) என்ற இளைஞரும், லாரியும் வந்த ஆந்திரா கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஞ்சனேயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் தீயனைப்பு படையினர், சமயபுரம் போலீஸôர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் சுமார் 30 நிமிடம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவர்தது பாதிப்படைந்தது.
இந்த விபத்து தொடர்பாக சமயபுரம் காவல் ஆய்வாளர் மனோகரன் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணமான தப்பியோடி வேன், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் ஆகிய 3 பேரையும் போலீஸôர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...