முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மேகி நூடுல்ஸை எரித்து போராட்டம்:பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள ரிலையன்ஸ் மார்ட் முன்பு திங்கள்கிழமை மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது

Updated On :8 ஜூன் 2015, 11:43 am

திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள ரிலையன்ஸ் மார்ட் முன்பு திங்கள்கிழமை மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேகி நூடுல்சில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி தமிழகம் உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ்ளை விற்பனை தடை விதித்தது. இதைத்தொடர்ந்து மேகி நூடுல்ஸ் விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியமங்கலம் ரிலையன்ஸ் மார்ட் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி மாவட்டத் தலைவி நிர்மலா தலைமையில் திரண்ட 26 பேர்,மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் அரியமங்கலம் போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.