டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ், பாஜக போட்டி இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்று அக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:43 am

அரவிந்தன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்று அக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 இந்தத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் புறக்கணிப்பு: தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக இளங்கோவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிரந்தர நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

 சட்டத்தின்படி, சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இதற்கு துணை போவது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் அத்து மீறல்களையும், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளையும் ஆளும் கட்சியின் அறங்கேற்றி வருகின்றனர்.

 இந்நிலையை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்தான் பாரபட்சமின்றி தேர்தல் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுப்போம் என தேர்தல் ஆணையம் உறுதிமொழி அளித்தால் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று பகிரங்கமாகக் கூறி இருந்தோம்.

 ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

 எனவே, ஜனநாயக சட்ட விரோதமான சூழலைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்ட காரணத்தினால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக புறக்கணிப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேமுதிக தலைவர் விஜயகாந்தை 2 முறை சந்தித்து, தமிழிசை ஆலோசனை நடத்தினாó. அதைத் தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அங்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

 எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடவில்லை என்ற முடிவை  எடுத்துள்ளது என்றார் அவர்.

 திமுக, பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஏற்கெனவே புறக்கணித்து விட்டன.  தற்போது தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவும் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.