மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு நலதிட்ட உதவிகள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் இன மக்கள், சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள....


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் இன மக்கள், சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் அரசின் குறிப்பிட்ட உதவிகளை பெற்று பயனடையாலாம் என்றும்,
இதுவரையில் பதிவு செய்தாவர்கள் தங்கள் பெயர்களை விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உடன் பதிவு செய்து பயன் அடைய மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிடுள்ள செய்திக் குறிப்பு:
சீர்மரபினருக்கு தமிழக அரசு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
இயற்கை மரணம் ஏற்பட்டால், இறந்த குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரமும், ஈமச் சடங்கு செலவினமாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகை: 10-ம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.1000 வீதமும், 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும், முறையான பட்டப் படிப்பு படித்து வருபவர்களுக்கும் தலா ரூ.1500 வழங்கப்படும்.
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு ரூ.1750-ம், முறையான பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.4000-மும், மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.5000-மும், தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.4000-மும், மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்பிற்கு ரூ.6000-மும், தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.6000-மும், மாணவர் இல்லவசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.8000-மும், ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1000-மும், மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சிப் படிப்பிற்கு ரூ.1200-ம் வழங்கப்படும்.
திருமண உதவித் தொகையையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மேலும் கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பிற்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையாக ரூ.500 வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000 இத் திட்டத்தில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...