டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விருதுநகரில் 50 சதவீத மானியத்துடன் 50 கோழிப்பண்ணை அமைக்க இலக்கு

தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புத் திட்டத்தனை 50 சதவீதம் மானியத்துடன்...

News image
Updated On :11 ஜூன் 2015, 6:29 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புத் திட்டத்தனை 50 சதவீதம் மானியத்துடன், விருதுநகர் மாவட்டத்தில் 50 கோழிப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி வளர்ப்புத் திட்டத்தினை 2012-13-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் கறிக்கோழி வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2015-16-ம் ஆண்டிற்கு 50 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவியுடன் அல்லது சுயமூலதனம் மூலம் கொட்டகை அமைக்கலாம். வங்கி நிதியுதவியுடன் கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோழிப்பண்ணை கொட்டகைகள் அமைப்பதற்கு ஏற்படும் செலவில் 25 சதவீதம் முன் மானியமாக வழங்கப்படும். இதைத் தவிர நபார்டு வங்கியின் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்து 25 சதவீதம் பின் மானியமாக வழங்கப்படும். ஆக மொக்கம் 50 சதவீதம் மானியம் அரசிடமிருந்து வழங்கப்படும். சுயமூலதனம் மூலம் கொட்டகை அமைக்க விருப்பமுள்ள பயனாளிகளுக்கு தமிழக அரசின் 25 சதவீத மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 5000 எண்ணிக்கையிலான கோழிகள் கொண்ட கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க மானியம் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் வகிக்கும் விவசாயிகள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழிப்பண்ணையை விரிவாக்கம் செய்திட ஆர்வமுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் இந்த நிதியாண்டில் பயன்பெற முடியாது.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 60 நாட்களுக்குள் கொட்டகை அமைத்தல் வேண்டும்.

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் கடிதம், வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் வழங்க ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட கால்நடை பரமரிப்பதுத் துறை மண்டல இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.