போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி: ஜூன் 15,16-ல் அண்ணாமலைப் பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம்

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :13 ஜூன் 2015, 7:41 am

ஜி.சுந்தரராஜன்

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த அறிய வாய்ப்பினை தமிழ் பயின்ற மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழியல்துறைத் தலைவர் அரங்க.பாரி வேண்டும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான வளாக நேர்காணல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் ஜூன் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம் பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். அண்ணாமலைப் பல்கலையில் நடைபெறும் வளாக நேர்காணலுக்கு சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்திலிருந்து நான்கு பேர் கொண்ட குழு வருகை தரவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் படித்த மாணவ, மாணவியர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் என அரங்க.பாரி தெரிவித்துள்ளார். வளாக நேர்காணலுக்கான ஏற்பாடுகளை தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி. தமிழியல்துறை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் தேடல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து உள்ளனர்.

மேலும் விபரங்களை 94880 13050 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.