டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராமங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி: பரிசளிப்பு விழா

இளைஞர்களிடையே ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் கிராமங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-கம்மாப்பட்டியில் நடைபெற்ற

News image
Updated On :14 ஜூன் 2015, 6:38 am

கோ.ஜெயக்குமார்

இளைஞர்களிடையே ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் கிராமங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-கம்மாப்பட்டியில் நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து தலைமை தாங்கினார்.
கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற நடுவப்பட்டி மாரிமுத்து என்பவர் தலைமையிலான அணிக்கு கேடயம் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொகக்ப் பரிசை காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இரண்டாம் இடம் பெற்ற திருத்தங்கல் முத்துக்குமார் என்பவர் தலைமையிலான அணிக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை, காவல் ஆய்வாளர் இளவரசன் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

மூன்றாம் இடம் பெற்ற கம்மாப்பட்டி முருகன் என்பவர் தலைமையிலான ?அணிக்கு கேடயம் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழச்சியில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.