ஏமாவதி, ஏரங்கி, அர்க்காவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பிய பிறகு வெளியாகும் மிகை நீரை முழுமையாக தேக்கி தமிழ்நாட்டிற்கு உபரி நீர் செல்லாமல் தடுப்பது தான் இந்த நான்கு அணைகள் கட்டப்படுவதன் நோக்கம். புதிதாகக் கட்டத் திட்டமிட்டுள்ள நான்கு நீர்த்தேக்கங்கள் நிரம்புவதற்கு வழியே இல்லை. இந்நான்கு நீர்த்தேக்கங்களும் நிரம்பாத போது அவற்றிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை. கர்நாடகத்தில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க் கட்சிகள் ஆகியவற்றின் ஒருமித்த முழக்கமும், “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமுடியாது” என்பதுதான்.