விருதுநகர் மாவட்டம், சிவகாசி மருத்துவ வட்டம், மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வெள்ளிக்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமை தாங்கினார்.சுகாதார ஆய்வாளர் வி.சந்திரசேகர் வரவேற்றார்.
ஆர்.ரெட்டியபட்டி, வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மந்திரகுமார் விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள், இதற்கான மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மாணவியர், ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், ந.ரெங்கலதா, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.