டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியருககு பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2015, 7:04 am

கோ.ஜெயக்குமார்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

பேராசியர் ரஜினி, பாலிமர் இழைகளின் கூட்டு துகள்கள் மற்றும் அதன் பயன்கள் என்ற தலைப்பில் பல ஆராய்சிக் கட்டுரைகளை பெல்ஜியம் கென்னட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியிருந்தார்.

பெல்ஜியம் பல்கலைக்கழகம், பேராசிரியர் ரஜினியை தேர்வு செய்து மூன்று மாதம் சி.டபிள்யூ.ஓ. நிதியின் கீழ் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு பயிற்சியை மேற்கொள்ள அழைத்தது. இதன் பேரில் பேராசிரியர் ரஜினி மார்ச் 1-ம் தேதி பெல்ஜியம் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்ச்சியாக கருத்தரங்குகளில் பேசியுள்ளார். மேலும் தற்போதைய கூட்டு துகள்கள் ஆராய்ச்சியும் சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.

பேராசிரியர் ரஜினியின் கட்டுரைகள், ஆராய்ச்சி முடிவுகளையும் ஏற்றுக் கொண்ட பெல்ஜியம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் பேட்ரிக் டி.பீட்ஸ் தலைமையிலான குழு, அவருக்கு முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்க தேர்வு செய்து சான்றிசதழ் வழங்கியுள்ளது.

பெல்ஜியம் பல்கலைக்கழகம் சென்று முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ள பேராசிரிர் ரஜினியை, சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.