விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கு: ரூ.7.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.7,24,423 இழப்பீடு வழங்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.7,24,423 இழப்பீடு வழங்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம், கே.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி முத்துமாரி (40). இவர் மாடுகள் வைத்து பராமரித்து, பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார். 17.1.10-ம் தேதி தனது மகள் வளைகாப்பிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர், பூவாணியில் உள்ள உறவினர்களிடம் சொல்வதற்காக சென்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, திருச்செந்தூர், குலசேகரபட்டணத்தைச் சேர்ந்த ஜெகன்ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் முத்துமாரி மீது மோதியுள்ளது. இதில் காயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 21.1.10-ம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து முத்துமாரியின் கணவர் திருப்பதி, மகள் பாண்டியம்மாள் (21), மகன் பழனிவேல் (19) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், கோயமுத்தூரில் உள்ள இக்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாரிசுதாரருக்கு ரூ.7,24,423 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...