ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் சன்னதி தெருவில் பாண்டியன்பிள்ளை மகன் மணிகண்டன் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். தைலாகுளம் கிராமத்திற்கு தெற்கே, அயன்நாச்சியார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நிறுவனம் பிளாட்டுகள் போட்டுள்ளதாக ராஜபாளையம், கூரைபிள்ளையார்கோவில் தெரு கு.சூர்யகுமார் (40) என்பவரிடம் ஆசை வார்த்தை கூறினார்களாம். இதன் பேரில் இவர் மற்றும் 22 பேர் சேர்ந்து 23 பிளாட்டுகளுக்கு மாதம் ரூ.290 வீதம் 46 மாதங்கள் மொத்தம் ரூ.3,06,820 கட்டியுள்ளார்கள். பத்திரப் பதிவிற்காக 23 பேரும் தலா ரூ.5500 வீதம் மொத்தம் ரூ.1,26,500 செலுத்தியுள்ளார்கள். ஆனால் நிறுவனம் பத்திரப் பதிவை காலதாமதம் செய்து வந்துள்ளது. இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பிளாட்டிற்கு பணம் செலுத்தியவர்கள் 6.4.15-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி தெருவில் உள்ள குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளார்கள். அங்கிருந்த மணிகண்டன், பெண்கள் உள்ளிட்ட மற்றவர்களிடம் ஆபாசமாகப் பேசியதுடன், கூலிப்படை கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.