திருச்சி ராஜா காலனி அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியின்போது, வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
நியூ ராஜா காலனி, விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்த குடியிருப்பை சுற்றித் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏற்கெனவே இருந்த தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அஸ்திவாரம் தோண்டிக்கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பாலையூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் (45) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஸ்ரீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

