டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்டு ஒன்னறை ஆண்டுகளே ஆன நிலையில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :25 ஜூன் 2015, 6:27 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்டு ஒன்னறை ஆண்டுகளே ஆன நிலையில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் முனியாண்டி (23). இவரும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த கௌசல்யா (21) என்பவரும் ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முனியாண்டி சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். கௌசல்யா மில் வேலைக்குச் சென்று வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவருக்கும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.