தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பட்டப்பகலில் தெருவில் பைக்கில் சென்றவர் இரும்பு தடியால் அடித்து கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை பகுதியில் சனிக்கிழமை காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த நடராஜ்(40) என்பவரை சந்திரசேகர்(24) அவரது சகோதரரான தேவராஜ்(36) ஆகியோர் இரும்பு

Updated On :27 ஜூன் 2015, 11:51 am

கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை பகுதியில் சனிக்கிழமை காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த நடராஜ்(40) என்பவரை சந்திரசேகர்(24) அவரது சகோதரரான தேவராஜ்(36) ஆகியோர் இரும்பு தடியால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை பகுதியை சேர்ந்தவர் காட்டன் மகன் நடராஜ். இவர் தற்போது ஆந்திர மாநிலம் வரதயப்பாளையம் அருகில் காம்பாக்கம் என்ற பகுதியில் வசித்து வந்தாலும் எகுமதுரை அடுத்த ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் கூலி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இவர் எகுமதுரையில் உள்ள அவரது அண்ணன் யேசுகான் என்பவரது வீட்டிற்கு வந்து சனிக்கிழமை காலை அவரது வீட்டிற்கு செல்ல கிளம்பியுள்ளார்.

அப்போது இவரது பைக் அவரது அண்ணன் வீட்டில் இருந்து சர்ச் தெரு வழியாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஆதிகான் மகன் தேவராஜ்(36) கல்லை எடுத்து நட்ராஜின் மீது எறிந்துள்ளார். தொடர்ந்து நட்ராஜ் நிலை தடுமாறி நிற்கையில் தேவராஜின் தம்பியும் ஆந்திர மாநிலம் தடா அருகே தொண்டூரில் வசித்து வருபவரான சந்திரசேகர்(24) ஒரு இரும்பு ராடால் நட்ராஜின் தலையில் அடித்துள்ளார்.இதில் நட்ராஜ் ரத்தவெள்ளித்தில் அவர் ஓட்டி வந்த பைக்கில் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதியில் தெருவில் சென்றுக் கொண்டிருந்த மக்களால் இதை தடுக்க இயலவில்லை.

தொடர்ந்து இது குறித்து நட்ராஜின் அண்ணன் மகன் ரவி(26) ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமார் நட்ராஜை இரும்பு தடியால் அடித்து கொன்ற சந்திரசேகர் மற்றும் தேவராஜை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்.

மேலும் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவலிங்கம் நேரில் விசாரணை நடத்திய போது ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடராஜின் அண்ணன் யேசுகானின் மகன் ரவிக்கும் தேவராஜிற்கும் வாய்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ரவிக்கு ஆதரவாக அவரது சித்தப்பாவான நட்ராஜ் இருந்ததாகவும் இந்த விரோதம் காரணமாக தேவராஜ் மற்றும் அவரது தம்பி சந்திரசேகர் நட்ராஜை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.