தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அருகே இரு அரசு பேருந்துகள் உரசி கொண்டதில் இருவர் பலி

பண்ருட்டி அருகே இரு அரசுப் பேருந்துகள் உரசிக் கொண்டதில் செவிலியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

News image
Updated On :29 ஜூன் 2015, 11:49 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே இரு அரசுப் பேருந்துகள் உரசிக் கொண்டதில் செவிலியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் சென்றிக்கொண்டிருந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்து அரசு பேருந்தும் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை அயில்மில் அருகே உரசிக் கொண்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மகாலட்சுமி(29), சூரக்குப்பத்தை சேர்ந்த தனம் (50) இருவரும் பேருந்தின் வெளிப்பகுதியில் இருந்த கம்பி குத்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.