மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கிய பேட்டரி பழுது: ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுடன் புதிய பேட்டரி வழங்க ஆணை

ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கிய பேட்டரி, 2 மாதங்களில் பழுதான மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், குறிப்பிட்ட பேட்டரி சர்வீஸ் நிறுவனம்

News image
Updated On :30 ஜூன் 2015, 10:38 am

கோ.ஜெயக்குமார்

ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கிய பேட்டரி, 2 மாதங்களில் பழுதான மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், குறிப்பிட்ட பேட்டரி சர்வீஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய பேட்டரியை ரூ.10 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரத்துடன் 1 மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டது.

ராஜபாளையம், செண்பகத்தோப்பு சாலை, இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பிரகாஷ். இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் ராஜேஸ், என்.வெங்கட்ராமன் ஆகியோர் ஓட்டுநர்களாக வேலை செய்து வருகிறார்கள்.23.7.13-ம் தேதி தனது ஓட்டுநர் ராஜேஸ் மூலம், ராஜபாளையம், தென்காசி சாலையில் பாலசுப்பிரமணியன் மனைவி பிரகதா என்பவர் நடத்தும் ஸ்ரீஇம்ப்ரீயல் பேட்டரி சர்வீஸ் கடையில் ரூ.2 ஆயிரம் செலுத்தி எக்ஸைட் எக்ஸ்ட்ரீம் என்ற பேட்டரி வாங்கியுள்ளார்.

இதற்கு 1 வருடம் வாரண்டி உண்டு. இந்த பேட்டரி 2 மாதத்தில் பழுதாகி, சார்ஜ் நிற்காமல் வெகு விரைவில் தீர்ந்துள்ளது. 9.9.13-ல் பேட்டரி வாங்கிய கடைக்குச் சென்று, வாரண்டி காலத்திற்குள் பேட்டரி பழுதாகிவிட்டதாகக் கூறி, அதனை செப்பனிட்டுத் தர கூறியுள்ளார்கள். கடையில் இரு நாட்கள் வைத்திருந்துவிட்டு, சரி செய்துவிட்டதாய் கூறி பேட்டரியை திரும்பக் கொடுத்துள்ளார்கள். ஆனால் பேட்டரி பழுதான நிலையிலேயே இருந்துள்ளது. இது குறித்து கடையில் கேட்டபோது சரியான பதில் இல்லையாம்.

26.2.14-ல் பிரகாஷ், தனது மற்றொரு ஓட்டுநரான என்.வெங்கட்ராமன் மூலமாய் பேட்டரியை சர்வீஸ் செய்து தரும்படி அதே கடைக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.  இதற்கு ரூ.40 கட்டணம்  வசூலித்துள்ளார்கள். ஆனால் பேட்டரியைத் திரும்பத் தரவில்லையாம். இதனையடுத்து 22.7.14-ம் தேதி பிரகாஷ், நேரிடையாக கடைக்குச் சென்று பேட்டரியைக் கேட்டுள்ளார்கள். கடையில் பேட்டரியைத் தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்களாம்.

இதனையடுத்து பிரகாஷ், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு கு்றைபாடுள்ள பேட்டரியை விற்பனை செய்துவிட்டார்கள். பேட்டரியின் குறைபாட்டை சரி செய்தும் தரவில்லை. இதனால் மன வருத்தம், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர், பிரகதா, பிரகாஷிற்கு புதிய பேட்டரியைத் தர வேண்டும் அல்லது ரூ.2 ஆயிரம் திருப்பித்தர வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் சேர்த்து ஒரு மாத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.